search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டிக்டாக் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்
    X

    டிக்டாக் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்

    டிக்டாக் செயலியை பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #TikTok
    டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் மூலம் இந்திய பயனர்களுக்கு தங்களது அக்கவுண்ட்டை முன்பை விட அதிக சிறப்பாக கையாள முடியும். 

    இந்த அம்சம் கமென்ட்க்ளில் அவர்கள் விரும்பும் வார்த்தைகளை ஃபில்ட்டர் செய்யும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது. ஃபில்ட்டர் கமென்ட்ஸ் என அழைக்கப்படும் இந்த அம்சம் பயனர் குறிப்பிட்ட 30 வார்த்தைகளை கமென்ட் பகுதியில் இருந்து நீக்கிவிடும்.

    பயனர்கள் ஒருமுறை வைத்த வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என டிக்டாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணைய பாதுகாப்பு தினத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென டிக்டாக் இந்தியா சைபர் பீஸ் பவுன்டேஷனுடன் இணைந்திருக்கிறது.


    தற்போதைய பாதுகாப்பு அம்சங்களின் படி பயனர்கள் தங்களது வீடியோக்களில் யார் கமென்ட் செய்ய வேண்டும் என்றும் யார் ரியாக்ட் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்க முடியும். இதேபோன்று பயனர்கள் தங்களுக்கு மெசேஞ் மற்றும் வீடியோக்களை யார் டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.

    முன்னதாக இந்திய பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த சூழலை செயலியில் உருவாக்க டிக்டாக் குறிக்கோள் கொண்டிருப்பதாக தெரிவித்தது. சீனாவை சேர்ந்த சமூக வலைதளமான டிக்டாக் செயலியை தடை செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் எனும் நிறுவனம் இந்த செயலியை 2016 ஆம் ஆண்டு சீனாவில் டோயுன் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. பின் 2017 ஆம் ஆண்டு இந்த செயலி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    Next Story
    ×