search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    இந்தியாவில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் அறிமுகம்

    ஒப்போ நிறுவனம் எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் எஃப்11 ஸ்மார்ட்போனினையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #OPPOF11 #Smartphone



    ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் எஃப்11 ஸ்மார்ட்போனினை ஒப்போ இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எஃப்11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் முந்தைய எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை போன்று ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எஃப்11 ஸ்மார்ட்போனில் 4020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ எஃப்11 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
    - 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, 1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0

    ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் ஃபேவரட் பர்ப்பிள் மற்றும் மார்பில் கிரீன உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×