search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவின் முதல் 80 செ.மீ. வளைந்த மானிட்டர் அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்
    X

    இந்தியாவின் முதல் 80 செ.மீ. வளைந்த மானிட்டர் அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 80 செ.மீ அளவில் வளைந்த எல்.இ.டி. மானிட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Zebronics



    ஒரு வழக்கமான பணி நாளுக்குப் பிறகு, வீட்டிற்கு வந்து ஒரு பெரிய திரையில் பொழுதுபோக்கை அனுபவிக்க நீங்கள் விரும்பலாம், திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது கேமிங்கில் அமர்ந்து முடிவில்லாத நேரத்தை கழிக்க விரும்பலாம். பெரியதொரு அகன்ற மற்றும் வளைந்த திரை என்பது நீங்கள் பொழுதுபோக்க விரும்பும் திரைக்காட்சியின் விகிதத்தை சிறந்த அம்சங்கள் பொருந்தியதாகவும் உண்மையான காட்சிகளை பார்க்க கூடிய ஒரு அனுபவத்தையும் சேர்க்கும்.

    இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. ஒலி உபகரணங்கள், மொபைல்/நவநாகரீக வீட்டு உபயோக பொருட்கள்  மற்றும் கண்காணிப்பு சாதனங்களை அறிமுகம் செய்து வரும் ஜெப்ரானிக்ஸ் தற்சமயம் 80 செ.மீ. எல்.இ.டி “ZEB-AC32FHD” என்ற பெயரில் பெரிய திரை கொண்ட வளைந்த மானிட்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

    ZEB-AC32FHD LED ஒரு மெல்லிய மற்றும் மிகவும் வளைந்த விளிம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது திரையில் பார்க்கும் அனைத்தும் நிஜத்தில் தோன்றுவது போன்றதான ஒரு உண்மையான அனுபவத்தை பயணர் உணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காட்சிக்கு மட்டுமில்லாமல் உட்புற ஒலிப்பெருக்கியின் ஒலி ஒரு அசாத்திய அனுபவத்தை வழங்குகிறது.



    இந்த மானிட்டர் கண்களுக்கு அயர்ச்சி உண்டாக்காத  டிஸ்ப்ளேபோர்ட் மற்றும் HDMI போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதில் காணும் வண்ணங்கள் அடர் கருப்பாகவும், பளீர் வெளுப்பாகவும் உயர்தர நிறங்களையுடையதாகவும் இருக்கும். இது 500000: 1 டைனமிக் காண்ட்ராஸ்ட் மற்றும் 178 டிகிரி பார்வைக் கோணத்தில் தொடர்ந்து கூர்ந்து காணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    நீண்டநேர கணினி பயன்படுத்துவோருக்கு ஏதுவாக அல்ட்ரா- ஸ்லிம் மெல்லிய திரை அணிவிக்கப்பட்டிருப்பதால் உங்களுக்கு அயர்ச்சி ஏற்படாது. எல்.இ.டி. மானிட்டரின் பின்புறத்தில் மெனு பொத்தான்களை கொண்டுள்ளது மேல் / கீழ் மற்றும் ஆன்/ஆஃப் சுவிட்ச் உள்ளது. இது ஹெட்போன் ஜாக், டிபி மற்றும் HDMI போர்ட் ஆகியவற்றோடு DC  உள்ளீடுகளுடன் வருகிறது. 

    இதன் அறிமுக  நிகழ்வில் பேசிய, ஜெப்ரோனிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி, "ஸ்மார்ட் புரோகிராமிங் மானிட்டர்கள் உண்மையிலேயே புரட்சிகரமானவை, அவை மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எங்களது சமீபத்திய LED மானிட்டர் ZEB-AC32FHD, ஒரு 80 செ.மீ. பரந்த வளைந்த எல்.ஈ. டி மானிட்டர், என்பது இந்திய தயாரிப்புகளில் முதன்முதலாக எங்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது உண்மையிலேயே அதிவேக அனுபவத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காக திரைகளில் நேரம் செலவிடுவோரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல நவீனமாக  கட்டமைக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×