search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டிக்டாக் செயலி மீது 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்த அமெரிக்கா
    X

    டிக்டாக் செயலி மீது 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்த அமெரிக்கா

    உலகின் பிரபல செயலிகளில் ஒன்றாக வளர்ந்து வரும் டிக்டாக் அமெரிக்கா வத்தக சபையில் 57 லட்சம் டாலர்களை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. #TikTok



    இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலி சமீபத்தில் 100 கோடி டவுன்லோடுகளை கடந்ததாக அறிவித்தது. இந்நிலையில், டிக்டாக் செயலி அமெரிக்காவில் குழந்தைகளின் தனியுரிமை விதிகளை மீறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.

    13 வயதிற்கும் குறைவான குழந்தைகளிடம் இருந்து தகவல்களை சேகரித்ததாக டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அந்நிறுவனம் 57 லட்சம் டாலர்களை அபராதமாக செலுத்த அமெரிக்க வர்த்தக சபை உத்தரவிட்டது. இந்நிலையில், அபராத தொகையை செலுத்துவதாக டிக்டாக் அறிவித்துள்ளது.



    மியூசிக்கல்.லி என்ற பெயரில் அறியப்பட்டு பின் டிக்டாக் என்ற வடிவில் இயங்கி வரும் செயலி சிறுவர்கள் பதிவிடும் தகவல்களை பதிவு செய்ததாக அமெரிக்க வர்த்த சபை குற்றம்சாட்டியது. 100 கோடி பேர் பயன்படுத்தி வரும் டிக்டாக் செயலியில் குறிப்பிட்ட சதவிகிதம் (அமெரிக்காவில் 65 லட்சம் பேர்) 13 வயதுக்கும் குறைவானோர் ஆகும்.

    டிக்டாக் செயலியை அதிக சிறுவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்த போதும், டிக்டாக் நிர்வாகம் பெற்றோர் அனுமதியின்றி சிறுவர்களிடம் தகவல்களை பெற்றதாக வர்த்தக சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அபராத தொகை மற்ற ஆன்லைன் சேவை நிறுவனங்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என அமெரிக்க வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

    டிக்டாக் செயலியில் இளைஞர்கள் பிரபல வீடியோக்களில் அவரவர் விரும்பும் பகுதியில் 15 விநாடிகளுக்கு லிப்-சின்க் செய்து அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அமெரிக்க வர்த்தக சபையின் விதிமுறைகளுக்கு உட்படும் வகையில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என பிரத்யேகமாக தனி செயலியை உருவாக்குவதாக டிக்டாக் அறிவித்துள்ளது. இந்த செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளாது.
    Next Story
    ×