search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் ரிலையன்ஸ் ஜியோ
    X

    நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் ரிலையன்ஸ் ஜியோ

    இந்திய டெலிகாம் சந்தையின் போக்கு பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio



    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் நாட்டின் முதல் டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும் என பென்ஸ்டெயின் மற்றும் கிரெடிட் சூசி வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை டேட்டா வழங்கி, குறுகிய காலத்தில் பிரபல நிறுவனமாக மாறியிருக்கிறது. இதற்கென ஜியோ செய்த முதலீடுகளை கடந்து, தற்சமயம் லாபம் ஈட்டி வருவதாக பென்ஸ்டெயின் தெரிவித்திருக்கிறது.

    முதலீடுகளின் மீதான லாபத்திற்கு நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகள் மற்றும் ஜியோபோன்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. ஜியோ நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகளை பின்பற்றி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.



    நீண்ட கால முதலீடுகளில் லாபத்தை ஈட்ட ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயனரிடம் இருந்து பெறும் வருவாயினை அதிகப்படுத்த வேண்டியிருக்கும் என பெயின்ஸ்டெயின் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் 12 மாதங்களில் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சேவைகளுக்கான வருவாய் உள்ளிட்டவற்றில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

    தற்போதைய நிதியாண்டின் படி மூன்றாவது காலாண்டின் இறுதியில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.7 கோடியாகவும், பாரதி ஏர்டெல் 28.4 கோடியாக இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 28 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
    Next Story
    ×