search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி எஸ்10 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு
    X

    கேலக்ஸி எஸ்10 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. #GalaxyS10 #Smartphone



    சாம்சங் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியும், 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கிறது.

    கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் வைட் மற்றும் ப்ரிஸ்ம் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. மெமரி என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. 

    கேலக்ஸி எஸ்10 பிளஸ் 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி மாடல்கள் லக்சூரியஸ் வைட், செராமிக் வைட் மற்றும் செராமிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் வைட் மற்றும் ப்ரிஸ்ம் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியில் கிடைக்கிறது.



    அறிமுக சலுகை:

    புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை அறிவிக்கப்பட்டிருப்பதோடு இவற்றுக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளன. கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

    புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.
    Next Story
    ×