search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்
    X

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்

    ரெட்மியின் புதிய நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியா வேரியண்ட்டில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது. #RedmiNote7 #Smartphone



    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் சியோமி ட்விட்டர் பக்கத்தில் டீசர் ஒன்று பதிவிடப்பட்டு, போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரில் ஏழாம் எண் மட்டும் தெளிவாக காட்சியளிக்கிறது. இதில் எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்கள் என கேள்வி வாடிக்கையாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

    புகைப்படத்தின்படி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 7 ப்ரோ சீனா வேரியண்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி நோட் 7 மாடலாக அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

    ரெட்மி நோட் 7 சீனா வேரியண்ட்டில் சாம்சங்கின் GMI சென்சார் வழங்கப்படுகிறது. எதிர்கால மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என சியோமி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். முன்னதாக சியோமி பொது மேளாலர் வாங் டெங் இதே தகவலை உறுதிப்படுத்தி இருந்தார்.



    எனினும், எந்த ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் வழங்காத நிலையில், பல்வேறு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பத்தை வழங்க சியோமி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இந்திய விற்பனையில் கடந்த ஆண்டின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை சியோமி பெற்றிருந்தது. சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் சியோமி நிறுவனம் இந்தியாவில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது.

    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மாற்றங்களை தவிர புதிய ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் சீன வேரியண்ட்டில் வழங்கப்பட்டிருந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்றே தெரிகிறது. அந்த வகையில் ரெட்மி நோட் 7 இந்திய வேரியண்ட் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 4 தொழில்நுட்பம், ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.
    Next Story
    ×