search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் - விரைவில் வெளியீடு
    X

    ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் - விரைவில் வெளியீடு

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsAppBusiness



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிஸ்னஸ் செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. சிறு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் நோக்கில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் துவங்கப்பட்டது. இந்த செயலியை கொண்டு பயனர்கள் தங்களது வியாபார விவரங்களுடன் சொந்தமாக ப்ரோஃபைல்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ப்ரோஃபைல்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வியாபாரத்தின் மின்னஞ்சல் அல்லது முகவரி மற்றும் வலைதள விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். எனினும், இதுவரை இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து WaBetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஓ.எஸ். பதிப்பின் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: wabetainfo

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஓ.எஸ். பீட்டா செயலி தற்சமயம் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த செயலியில் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் வெவ்வேறு நிறங்களை கொண்ட பின்னணி புகைப்படங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிகிறது.

    புதிய வசதிகளை பொருத்தவரை க்விக் ரிப்ளைக்கள், ஆட்டோமேட்டெட் கிரீட்டிங், அவே மெசேஜ்கள் மற்றும் ரெசிபியண்ட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். 8 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை இன்ஸ்டால் செய்ததும், வாட்ஸ்அப் பிஸ்னஸ் மூலம் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள எளிய, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்ற குறுந்தகவல் கிடைக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருக்கும் சாட் ஹிஸ்ட்ரியை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் மைக்ரேட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×