search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்
    X

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #XiaomiMi9 #Smartphone



    சியோமி நிறுவனம் தனது Mi 9 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. சியோமியின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் மற்றும் விளம்பர தூதர் வாங் யுவான் வெளியிட்ட தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் சக்திவாயந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    அதன்படி புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இதின் பின்புறம் கிரேடியண்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டை முன்கூட்டியே திட்டமிட்டிருப்பதால், Mi 9 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படுகிறது.

    இதுதவிர Mi 9 ஸ்மார்ட்போனின் பின்புறத்தை சியோமி தனது வெய்போ அக்கவுண்ட்டில் அறிமுகமானது. அதன்படி ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாசி பேக் மற்றும் கிளாஸ் பேனல் கொண்டிருக்கிறது. இத்துடன் Mi 9 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கப்படுகிறது.



    சியோமி Mi 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் X24 எல்.டி.இ. மோடெம் வழங்கப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என்றே தெரிகிறது. முன்னதாக சீஃபியஸ் என்ற பெயரில் சியோமியின் ஸ்மார்ட்போன் ஒன்று கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆனது.

    சியோமி Mi 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மூன்று பிரைமரி கேமரா இவற்றில் ஒன்று 48 எம்.பி.சென்சார், 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
    Next Story
    ×