search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புகைப்படம் நன்றி: winfuture
    X
    புகைப்படம் நன்றி: winfuture

    டூயல் கேமரா, 3 ஜி.பி. ரேமுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்

    சோனி நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #XperiaL3 #Smartphone



    சோனி நிறுவனம் எக்ஸ்.ஏ.3 மற்றும் எக்ஸ்.ஏ.3 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தவிர புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சோனியின் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் எல்3 என்று அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் 18:9 ஹெச்.டி. 720 பிக்சல் எல்.சி.டி. டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, போர்டிரெயிட் வசதியுடன் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்களிடையே பொருத்தப்பட்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: winfuture

    ஸ்மார்ட்போன் முழுவதும் பிளாஸ்டிக் கேஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் சில்வர், கிரே மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    சோனி எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் விலை பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாத நிலையில், இதன் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,020) என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனினை சோனி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம்.
    Next Story
    ×