search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புகைப்படம் நன்றி: Yanko Design
    X
    புகைப்படம் நன்றி: Yanko Design

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் 2019 கான்செப்ட் ரென்டர்கள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ரேசர் ஸ்மார்ட்போன்களின் கான்செப்ட் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotorolaRazr #Smartphone



    மோட்டோரோலாவின் பிரபல மடிக்கக்கூடிய மொபைல் போன் புதிய வடிவமைப்பு மற்றும் அதிநவீன அம்சங்களுடன் மீண்டும் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து கடந்த மாதம் வெளியான தகவல்களில் மோட்டோரோலாவின் பிரபல மொபைல் போனினை புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்ய லெனோவோ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    மோட்டோரோலா ரேசர் 2019 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என்றும் இதன் விலை 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,04,300) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


    புகைப்படம் நன்றி: Yanko Design

    எனினும், ஸ்மார்ட்போனின் 3டி ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது போன்ற விவரங்கள் வெளியாகியிருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்கள் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வெளியானது.

    இம்முறை வெளியாகி இருக்கும் ரென்டர்களை பார்க்கும் போது ஏற்கனவே வெளியான 3டி ரென்டர்களை தழுவி உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. புதிய ரென்டர்கள் யான்கோ டிசைனின் சாரங் சேத் உருவாக்கியிருக்கிறார். இந்த வடிவமைப்புகளில் மோட்டோரோலா ரேசர் 2019 உண்மையில் எவ்வாறு காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. காப்புரிமை விவரங்களில் புதிய ரேசர் போனில் எவ்வித பட்டன்களும் வழங்கப்படுவதாக தெரியவில்லை. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×