search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பி.எஸ்.என்.எல். அதரடி சலுகை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு
    X

    பி.எஸ்.என்.எல். அதரடி சலுகை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிரபலமான பம்ப்பர் ஆஃபர் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. #BSNL #Offers



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் பம்ப்பர் ஆஃபர் எனும் சலுகையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அன்று முதல் அதிக பிரபலமாக இருக்கும் பம்ப்பர் ஆஃபர் மூலம் பயனர்களுக்கு தினமும் 2.2 ஜி.பி. டேட்டா கூடுதலாக கிடைக்கும். 

    பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் ரூ.186 முதல் ரூ.2,099 வரையிலான சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகளுக்கும் பம்ப்பர் ஆஃபர் சேர்க்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். முந்தைய அறிவிப்பின் படி பம்ப்பர் ஆஃபர் நேற்று (ஜணவரி 31) நிறைவுற்றது. 

    இந்நிலையில், பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீ்ட்டிக்கப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். பம்ப்பர் ஆஃபர் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கிடைக்கும். 



    பம்ப்பர் ஆஃபர் நீட்டிக்கப்பட்டிருப்பதால் பி.எஸ்.என்.எல். ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999, ரூ.1,699 மற்றும் ரூ.2,099 போன்ற சலுகைகளை தேர்வு செய்வோருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தினமும் 2.2 ஜி.பி. டேட்டா கூடுதலாக கிடைக்கும். முன்னதாக இதே சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.1 ஜி.பி. டேட்டா கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மாற்றப்பட்டிருக்கும் பம்ப்பர் ஆஃபர் மூலம் ரூ.186, ரூ.429 மற்றும் ரூ.999 சலுகையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். மூன்று பி.எஸ்.என்.எல். சலுகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.485 மற்றும் ரூ.666 சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.7 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்தவரிசையில் ரூ.1,699 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4.2 ஜி.பி. டேட்டாவும், ரூ.2,099 சலுகையில் தினமும் 6.2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 2 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
    Next Story
    ×