search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் புதிய சிப்செட் அறிமுகம் - இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா கிடைக்கும்
    X

    சாம்சங் புதிய சிப்செட் அறிமுகம் - இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா கிடைக்கும்

    சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய 7 சீரிஸ் சிப்செட் அந்நிறுவன பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா பயன்படுத்த வழி செய்யும். #Samsung



    சாம்சங் நிறுவனம் புதிதாக ஆக்டா-கோர் மொபைல் சிப்செட் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. எக்சைனோஸ் 7 சீரிஸ் - எக்சைனோஸ் 7904 என்ற பெயரில் புதிய சிப்செட் அறிமுகமாகி இருக்கிறது.

    சாம்சங் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய சிப்செட் இந்திய சந்தைக்கென உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 7904 சிப்செட் மல்டி-மீடியா மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.



    இதன்மூலம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் சீரான வேகத்தில் மல்டி-டாஸ்கிங் செய்ய முடியும். புதிய எக்சைனோஸ் 7904 சிப்செட்டை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. எனினும், இந்த சிப்செட் கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எட்டு கோர்களில் 14 என்.எம். வழிமுறையில் சாம்சங் புதிய சிப்செட் உருவாகி இருக்கிறது. இதில் இரண்டு கார்டெக்ஸ் ஏ73 கோர்கள் 1.8 ஜிகாஹெர்ட்சில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆறு கார்டெக்ஸ் ஏ53 கோர்கள் 1.6 ஜிகாஹெர்ட்சில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. 

    மல்டி டாஸ்கிங் மட்டுமின்றி புதிய எக்சைனோஸ் சிப்செட் மூன்று கேமரா சென்சார்களை சப்போர்ட் செய்யும். இதனால் உயர் ரக புகைப்படங்களுடன், வீடியோக்களையும் படமாக்க முடியும். கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சாம்சங் எக்சைனோஸ் 7904 சிப்செட் எல்.டி.இ. மோடெம் வசதி கொண்டிருக்கிறது.
    Next Story
    ×