search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ
    X

    ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #RedmiNote7Pro #Smartphone



    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சீனாவில் அறிமுகமானதை தொடர்ந்து விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன. ரெட்மி நோட் 7 அறிமுக விழாவிலேயே ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் ரெட்மி நோட் 7 போன்றே புதிய நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் சீனாவின் வெய்போ தளத்தில் லீக் ஆனது. அதில் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார் வழங்கப்படுகிறது. 

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சாம்சங் ISOCELL GM1 சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.



    முன்னதாக குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஆக்டா-கோர் க்ரியோ 675 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 612 GPU வழங்கப்படுகிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்டின் மேம்பட்ட வடிவில் 11 என்.எம். தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. 

    இந்த பிராசஸரில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4 பிளஸ் தொழில்நுட்பத்திற்கான வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் அல்ட்ரா-ஹெச்.டி. (4K @ 30fps) தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. 

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 1499 (இந்திய மதிப்பில் ரூ.15,800) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை CNY 999 (இந்திய மதிப்பில் ரூ.10,500) என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் CNY1199 (இந்திய மதிப்பில் ரூ.12,600) என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை CNY 1399 (இந்திய மதிப்பில் ரூ.14,700) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×