search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அப்பவே பயனர் விவரங்களை விற்க முயன்ற ஃபேஸ்புக்
    X

    அப்பவே பயனர் விவரங்களை விற்க முயன்ற ஃபேஸ்புக்

    ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் விவரங்களை அப்போதே விற்பனை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #socialmedia



    ஃபேஸ்புக் நிறுவனம் அதன் பயனர் விவரங்களை விற்பனை செய்ய சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு, பின் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2012 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் ஊழியர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு பயனர் விவரங்கள் அடங்கிய கிராஃப் ஏ.பி.ஐ. இயக்க 2,50,000 டாலர்கள் கட்டணமாக நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கின் கிராஃப் ஏ.பி.ஐ. பயனரின் முக்கிய விவரங்கள் அடங்கிய தொகுப்பு ஆகும்.

    பின் 2014 ஏப்ரல் மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கிராஃப் ஏ.பி.ஐ. இயங்கும் முறையை மாற்றியமைத்தது. ஜூன் 2015 இல் ஃபேஸ்புக் ஏற்கனவே வழங்கி வந்த சில விவரங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்ததாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    பயனர் விவரங்களை இயக்க விளம்பர நிறுவனங்களுக்கு அதிகளவு கட்டணம் நிர்ணயம் செய்வது பற்றி ஃபேஸ்புக் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஃபேஸ்புக் தரப்பில் கிராஃப் ஏ.பி.ஐ. வெர்ஷன் 1 இயக்குவதற்கான அனுமதி பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பயனர் விவரங்களை சேகரிக்க அவர்களது லொகேஷன், அவர்களின் குறுந்தகவல் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை டிராக் செய்து ஃபேஸ்புக் அவற்றை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கியதாக கார்டியன் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×