search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி
    X

    சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GalaxyM #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி, அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகி இருக்கின்றன. 

    இந்நிலையில், சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    இதுதவிர புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அந்நிறுவன அதிகாரி பேட்டி ஒன்றில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச வெளியீட்டிற்கு முன் இந்தியாவில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.


    புகைப்படம் நன்றி: 91mobiles

    சாம்சங் நிறுவனத்தின் இம்முடிவை பார்க்கும் போது, புதிய ஸ்மார்ட்போன்கள் சியோமிக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. கடந்த ஆண்டு மூன்றில் இரு காலாண்டு விற்பனையில் சாம்சங் நிறுவனம் பின்தங்கியிருந்தது கவுன்டர்பாயின்ட் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மூன்று மாடல்களை அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்வதால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு புதிய எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×