search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் 65 இன்ச் 4K ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் செய்யும் சியோமி
    X

    இந்தியாவில் 65 இன்ச் 4K ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் செய்யும் சியோமி

    சியோமி இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட் டி.வி. ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. #Xiaomi #SmartTV



    சியோமி இந்தியா புதிதாக ஸ்மார்ட் டி.வி. ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சியோமியின் புதிய ஸ்மார்ட் டி.வி. ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனம் 65 இன்ச் அளவில் 4K தரத்தில் ஹெச்.டி.ஆர். வசதி கொண்ட ஸ்மார்ட் டி.வி.யினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் என இருவித அளவுகளில் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட் டி.வி. சியோமியின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும். புதிய ஸ்மார்ட் டி.வி.க்கான டீசருடன் #TheBiggerPicture எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது. 



    இதுவே பெரிய டி.வி. மாடல் ஒன்று வெளியாக இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் Mi டி.வி. 4 65-இன்ச் மாடல் ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் இந்த டி.வி. விலை 5999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.62,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்தியாவில் சியோமியின் புதிய டி.வி. விலை ரூ.70,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான Mi டி.வி. 4 ப்ரோ சீரிஸ் போன்று சியோமியின் புதிய Mi டி.வி. மாடல்களும் ஆண்ட்ராய்டு டி.வி. இயங்குதளம், ஸ்மார்ட் ரிமோட் மற்றும் வாய்ஸ் சர்ச் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×