search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அக்டோபரில் மட்டும் 1.05 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்த ரிலையன்ஸ் ஜியோ
    X

    அக்டோபரில் மட்டும் 1.05 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்த ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்கள் இணைந்துள்ளதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அவ்வாறு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் கூட்டாக 2018 அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.08 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன.

    அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் கூடுதலாக வாடிக்கையாளர்களை சேர்க்கவில்லை. 



    அக்டோபர் 2018 இல் மட்டும் வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்.டி.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

    இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 73.61 லட்சம், ஏர்டெல் நிறுவனம் 18.64 லட்சம், டாடா டெலிசர்வீசஸ் 9.25 லட்சம், எம்.டி.என்.எல். நிறுவனம் 8,068 மற்றும் ஆர்.காம் நிறுவனம் 3,831 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

    செப்டம்பர் முதல் அக்டோபர் மாத இறுதி வரை இந்திய டெலிபோன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119.14 கோடியில் இருந்து 119.20 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு மாதத்தில் 0.05 சதவிகிதம் வளர்ச்சியாகும்.
    Next Story
    ×