search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏழு மாதங்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம்
    X

    ஏழு மாதங்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம்

    ஒப்போவின் துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. #Relame #smartphone



    ஒப்போவின் துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்தில் ரியல்மி 1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 

    இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து பிரபலமாகி வரும் ரியல்மி இந்தியாவில் ஏழே மாதங்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ரியல்மியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. 



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் 2018 தீபாவளி கால பண்டிகை விற்பனையில் மூன்றாவது இடம் பிடித்ததாக கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. ரியல்மியை தொடர்ந்து ஹானர், ஹூவாய், எல்.ஜி., ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    இந்தியாவில் 40 லட்சம் ஸ்மார்ட்போன் விற்பனை கொண்டாடும் வகையில் ரியல்மி சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்தியாவில் ரியல்மி சிறப்பு விற்பனை ஜனவரி 7 ஆம் தேதி துவங்கி ஜனவரி 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ரியல்மி சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.



    ஏற்கனவே ரியல்மி விற்பனை செய்து வரும் ஸ்மார்ட்போன்கள் தவிர ரியல்மி புதிய ஸ்மார்ட்போனினை ரூ.10,000 பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி ஏ1 என அழைக்கப்படலாம் என்றும் இதில் குவால்காம் நிறுவனத்தின் 600 சீரிஸ் பிராசஸர் அல்லது மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி யு1 மாடலை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.

    ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர், 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி, 6.3 இன்ச் ஐ.பி.எஸ். பேனல், 2340x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×