search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    2019 ஏப்ரல் முதல் குட்பை கூறப்போகும் கூகுள் சமூக வலைதளம்
    X

    2019 ஏப்ரல் முதல் குட்பை கூறப்போகும் கூகுள் சமூக வலைதளம்

    கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை முன்கூட்டியே நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. #GooglePlus



    கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை முன்கூட்டியே நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக மென்பொருள் டெவலப்பர்களுக்கு கூகுள் பிளஸ் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அம்பலப்படுத்திய பிழை இரண்டாவது முறையாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதுகுறித்து கூகுள் பிளஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் தகவல்களில் 5.25 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதிக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. சமீபத்திய பிழை தனிப்பட்ட முறையில் ப்ரோஃபைல் விவரங்களை வைத்திருந்த பயனர்களின் விவரங்களையும் ஆப் டெவலப்பர்கள் இயக்க வழி செய்வதாக அமைந்தது.

    ஆப் டெவலப்பர்கள் இந்த விவரங்களை ஆறு நாட்களுக்கு கவனக்குறைவாக வைத்திருந்தனர் என கூகுள் தெரிவித்துள்ளது. வழக்கமான சோதனையின் போது இந்த பிழை கண்டறியப்பட்டு ஒரே வாரத்தில் பிழை சரி செய்யப்பட்டதாக கூகுள் தெரிவித்தது.



    இதேபோன்ற பிழையை கூகுள் அக்டோபர் மாதத்திலும் கண்டறிந்து தெரிவித்தது. மார்ச் 2018இல் பிழை கண்டறியப்பட்டு, அது உடனடியாக சரி செய்யப்பட்டதாக தெரிவித்தது. இந்த பிழை பயனர்களின் ப்ரோஃபைல் விவரங்களான பயனரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, வேலை மற்றும் வயது உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்தியது. இந்த பிழையில் சுமார் ஐந்து லட்சம் அக்கவுன்ட்கள் பாதிக்கப்பட்டன.

    கூகுள் கணினிகளை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் எதுவும் ஊடுறவவில்லை என்றும், டெவலப்பர்கள் யாரும் பயனர் விவரங்களை தவறாக பயன்படுத்தியதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது.

    இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக தனியுரிமை சார்ந்த பிரச்சனையில் கூகுள் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து கூகுள் பிளஸ் சேவை ஏப்ரல் 2019 வாக்கில் நிறுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் சேவையை ஆகஸ்டு 2019இல் நிறுத்துவதாக அறிவித்து இருந்தது. 

    மேலும் அடுத்த 90 நாட்களுக்குள் டெவலப்பர்களுக்கான ஏ.பி.ஐ. சேவை நிறுத்தப்படுகிறது. கூகுள் பிளஸ் குறைந்த அளவு பயன்பாடு கொண்டிருக்கிறது. இதனால் தளத்தை வெற்றிகரமாக நடத்துவதில் பல்வேறு சவால்கள் நிறைந்து இருப்பதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.
    Next Story
    ×