search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்கள்
    X

    ஒன்பிளஸ் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்கள்

    ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #oneplus



    இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில் விற்பனை செய்து முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் ஒன்பிளஸ், அடுத்ததாக ஸ்மார்ட் டி.வி. மாடல்களை விற்பனை செய்ய இருக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் டி.வி. மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்திருக்கிறார்.

    இந்தியாவில் ஒன்பிளஸ் டி.வி. மாடல்களை 2020ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பீட் லௌ தெரிவித்தார். ஸ்மார்ட் டி.வி. மாடல்களும் ஃபிளாக்ஷிப் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அதிக தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்பிளஸ் தனது டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி. வெளியாகும் முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் பீட் லௌ தெரிவித்திருக்கிறார். புது ஸ்மார்ட் டி.வி. மாடல்களும் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என பீட் லௌ தெரிவித்திருக்கிறார்.



    தற்சமயம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் வெளியாகும் போது ஒன்பிளஸ் டி.வி. மாடல்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அமேசான் இந்தியாவின் மூத்த துணை தலைவர் மற்றும் இந்தியாவுக்கான மேலாளர் அமித் அகர்வால் தெரிவித்தார்.

    “அமேசான் வலைதளத்தில் டி.வி. மாடல்கள் அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. இதன் காரணமாக டி.வி. பிரிவில் அதிகளவு முதலீடு செய்து வருகிறோம். இதனுடன் டெலிவரி செய்யப்படும் போதே டி.வி.க்களை இன்ஸ்டால் செய்யும் வசதியை துவங்கி இருக்கிறோம். விநியோகம் செய்வதில் அமேசான் முழு வீச்சில் செயல்பட்டு, ஒன்பிளஸ் டி.வி. வெளியாகும் இடங்களில் விற்பனையை ஊக்குவிக்க முயற்சி செய்யும்ம்” என அவர் மேலும் தெரிவித்தார். 

    ஒன்பிளஸ் டி.வி. மாடல் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஏற்கனவே ஒன்பிளஸ் வலைதள பக்கங்களில் இருந்து வெளியான விவரங்களில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி. பிரீமியம் ஃபிளாக்ஷிப் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. #oneplus
    Next Story
    ×