search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பிலிப்ஸ் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்
    X

    பிலிப்ஸ் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

    பிலிப்ஸ் நிறுவனம் புதிய எல்.இ.டி. மற்றும் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Philips



    டி.பி.வி. டெக்னாலஜி இந்தியாவில் 22 இன்ச் முதல் 65 இன்ச் வரை புதிய பிலிப்ஸ் தொலைகாட்சி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய தொலைகாட்சிகளில் பிலிப்ஸ் காப்புரிமை பெற்ற ஆம்பிலைட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 65 இன்ச் 65PUT6703S/94 மிகப்பெரிய மாடலாக இருப்பதோடு, இந்த எல்.இ.டி. டி.வி.க்களில் 3 பக்க அம்பிலைட் பொருத்தப்பட்டுள்ளது.

    தொலைகாட்சியின் பக்கவாட்டுகளில் ஆன்-ஸ்கிரீன் நிறங்கள் சுவரில் பிரதிபலிக்கச் செய்கிறது. இத்துடன் ஆம்பிலைட் மியூசிக் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதால், அறையில் விர்ச்சுவல் சவுன்ட் மற்றும் மின்விளக்குகளை மிளிரச் செய்யும். புதிய டி.வி.க்களில் பிக்சல் பிரிசைஸ் ஹெச்.டி. வழங்கப்பட்டிருக்கிறது. இது புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிக தெளிவான காட்சியை பிரதிபலிக்கும்.



    பிலிப்ஸ் 4K டி.வி.க்கள் (6100/ 6700 சீரிஸ்) ஹெச்.டி.ஆர். பிளஸ் மற்றும் SAPHI வழங்கப்பட்டு இருப்பதால் டி.வி. மற்றும் தரவுகளை மிக எளிமையாக இயக்க வழி செய்கிறது. இதன் மைக்ரோ டிம்மிங் மென்பொருள் படத்தை 6400 வெவ்வேறு சூழல்களில் கண்டறிந்து, அதற்கு ஏற்ப தரத்தை மாற்றியமைக்கும்.

    இதனுடன் டி.டி.எஸ். ஹெச்.டி. (DTS HD) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருப்பதால், சவுண்டு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு, ஆடியோ தரம் இயற்கையாக வெளிப்படுகிறது. 

    புதிய 22 இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. மாடல் விலை ரூ.9,990 முதல் துவங்கி டாப்-என்ட் 65PUT6703S 65-இன்ச் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய தொலைகாட்சி மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×