search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மூன்று ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு டிஜிட்டல் பயிற்சி வழங்கும் ஃபேஸ்புக்
    X

    மூன்று ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு டிஜிட்டல் பயிற்சி வழங்கும் ஃபேஸ்புக்

    ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 50 லட்சம் பேருக்கு டிஜிட்டல் நுட்பங்களில் பயிற்சி அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook



    உலகில் சிறு வியாபாரங்களை மேற்கொள்வோரும், சர்வதேச பொருளாதாரத்தை எட்டும் நோக்கில், ஃபேஸ்புக் நிறுவனம் 2021ம் ஆண்டிற்குள் சுமார் 50 லட்சம் பேருக்கு டிஜிட்டல் யுக்திகளை கற்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அந்நிறுவனம் ஏற்கனவே 50 நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து 150 நகரங்களில், 48,000 கிராமங்களில் வசிக்கும் சுமார் பத்து லட்சம் பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறது. ஃபேஸ்புக் கம்யூனிட்டி பூஸ்ட் திட்டத்தின் கீழ் மக்களுக்கு டிஜிட்டல் யுக்திகளில் தொடர்ந்து பயிற்சி வழங்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் சேவைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மக்களுக்கு எளிய முறையில் தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படுகிறது. இவற்றில் பயனர்களுக்கு டிஜிட்டல் யுக்திகளுடன், தங்களது வியாபாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றிய விளக்கங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றும் கற்பிக்கப்படுகிறது. 



    இதன் மூலம் பயனர்களுக்கு வலைதளம் உருவாக்கும் போது ஏற்படும் பெருமளவு தொகையை தவிர்ப்பது, மொபைல் பொருளாதாரம் மூலம் சந்தைப்படுத்துவதில் அறிவை வளர்த்து கொள்வது, ஃபேஸ்புக் பயன்படுத்துவோரிடம் தங்களது பொருட்களை சுமார் 200 கோடி பேருக்கு கொண்டு சேர்ப்பதில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    இவ்வாறு செய்வதன் மூலம் பயனரின் வியாபாரம் மற்றும் வளர்ச்சி பெறாமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரமும் சேர்ந்து வளர்ச்சி பெறுகிறது. ஃபேஸ்புக் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விளம்பரம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாகவும், அவர்களுக்கு புரியும் வகையில் 14 மொழிகளில் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×