search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் சோதனை துவங்கியது
    X

    சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் சோதனை துவங்கியது

    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்துள்ளார். #mimix3 #5G



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. Mi மிக்ஸ் 3 அறிமுகமானதும், இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்தார்.

    லின் பின் தனது வெய்போ அக்கவுன்ட்டில் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு பை இயங்குதளத்தின் ஸ்டாக் வெர்ஷனை கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் வலது புற மேல்பக்கம் 5ஜி நெட்வொர்க் காணப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: Weibo

    அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் அறிமுகமாகும் போது ஆன்ட்ராய்டு 9 பை மற்றும் சமீபத்திய MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கும். புதிய 5ஜி வேரியன்ட் புதிய சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்குமா அல்லது, பழைய சிறப்பம்சங்களுடன் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனையும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்படுத்தப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்பட்டது.

    அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் Mi மிக்ஸ் 3 போன்ற வடிவமைப்புடன், புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.
    Next Story
    ×