search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அடுத்த வாரம் இந்தியா வரும் ஹூவாய் ஸ்மார்ட்போன்
    X

    அடுத்த வாரம் இந்தியா வரும் ஹூவாய் ஸ்மார்ட்போன்

    ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #HuaweiMate20Pro



    ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 27ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    ஹூவாய் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை என்றாலும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரைமரி கேமரா வடிவமைப்பை பார்க்கும் போது ஹூவாய் தனது மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. 

    ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 10-லெவல் டைனமிக் பிரெஷர் சென்சிங் தொழில்நுட்பம், 3D ஃபேஸ் அன்லாக், 3D லைவ் எமோஜி மற்றும் ஏ.ஐ. லைவ் மாடல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் மேட் ஸ்மார்ட்போன்களில் மூன்று பிரைமரி கேமரா மேட்ரிக்ஸ் சிஸ்டம் மற்றும் OIS வழங்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 3120x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே
    - ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
    - 720 MHz ARM மாலி-G76MP10 GPU
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
    - 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - டூயல் ஸ்பீக்கர்கள்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 40 வாட் சூப்பர்சார்ஜ், 15 வாட் வயர்லெஸ் க்விக் சார்ஜ்

    ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, பிளாக், டுவிலைட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளி்ட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1049 யூரோ இந்திய மதிப்பில் ரூ.89,050 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×