search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதுவித டிஸ்ப்ளே

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களும் இணையத்தில் லீக் ஆகி வருகிறது. #GalaxyS10



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறைய M9 டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் டயோட் பம்ப்டு சாலிட் ஸ்டேட் (DPSS) செல்ஃபி கேமர மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்களுக்கென லேசர் டிரில் செய்யப்பட்டிருக்கும்.

    சாம்சங் டிஸ்ப்ளே தரம் உறுதியாக இருக்கும் என்பதால், இவ்வகை டிஸ்ப்ளே பேனல்களை சாம்சங் வழங்க இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனம் மூன்று நாட்ச் கொண்ட ஸ்கிரீன்களை அறிமுகம் செய்தது. அவற்றில் ஒன்று இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே, அதாவது செல்ஃபி கேமராவுக்கென வட்ட வடிவ கட்-அவுட் கொண்டிருக்கிறது. 

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் பேனலில் இரண்டு ஓட்டைகள் இருக்கும் என்றும், இதில் ஒன்று செல்ஃபி கேமராவிற்கும் மற்றொன்று இன்ஃப்ராரெட் சென்சாருக்கானது என கூறப்படுகிறது. இரண்டு ஓட்டைகளும் லேசர் டிரில் மூலம் டயோட் பம்ப் செய்யப்பட்டிருக்கும்.


    புகைப்படம் நன்றி: Wcftech

    இதற்கென சாம்சங் நிறுவனம் எஸ்.எஃப்.ஏ., ஃபில் ஆப்டிக்ஸ் மற்றும் வொனிக் ஐ.பி.எஸ். லேசர் உபகரணங்களை கொண்டு டிரில் செய்யும் என கூறப்படுகிறது. எனினும், இந்த வழிமுறையில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் மாற்று வழிமுறையை பயன்படுத்தலாம் என தெரிகிறது.

    கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனிற்கான OLED பேனல்கள், சாம்சங் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களை விட அதிக தரமுள்ளதாக இருக்கும். தனது கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் M9 என அழைக்கப்படும் OLED பேனல்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. தற்போதைய எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் M8 ரக பேனல்களை கொண்டிருக்கிறது.
    Next Story
    ×