search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட்போன் செயலி
    X

    மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட்போன் செயலி

    ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் செயலி மாரடைப்பு ஏற்பட இருக்கும் அபாயத்தை கண்டறிந்து தெரிவிக்கும். #smartphone #Apps



    அமெரிக்காவில் இயங்கி வரும் இன்டர்மவுன்டெயின் மருத்துவ மையம் மற்றும் இதய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

    மருத்துவ மையங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கண்டறிய நடத்தப்படும் இ.சி.ஜி. சோதனைக்கு நிகராக மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கும் செயலியை இன்டர்மவுன்டெயின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். புதிய செயலியை கொண்டு பலரது உயிர்களை காப்பாற்ற முடியும். 

    ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய செயலி ஒருவரின் இதய நடவடிக்கையை டிராக் செய்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறியும். இந்த செயலி ஒருவரின் இதயத்தின் ரத்தக்குழாயில் நிரந்தர அடைப்பு ஏற்படுவதை கண்டறியும் தன்மை கொண்டுள்ளது.





    ஸ்டெமி மாரடைப்புக்கு பின் வழங்கப்படும் சிகிச்சை மூலமாக பலரது உயிரை காப்பாற்ற முடியும் என்றும் தற்சமயம் வரை கிடைத்து இருக்கும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடத்தக்க நன்மையை வழங்கும் வகையில் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 204 நோயாளிகள் வழக்கமான இ.சி.ஜி. பரிசோதனையும், கார்டியா (Kardia) செயலி மூலம் சோதனை செய்து கொண்டனர். இது இரு வயர் இணைக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போனிலேயே கண்காணிக்கப்பட்டது. வயர் இணைக்கப்பட்ட நிலையில் செயலி ஸ்டெமி மற்றும் நான்-ஸ்டெமி இ.சி.ஜி. சோதனையை மிகத்துல்லியமாக கண்டறிந்தது.

    இந்த செயலி மாரடைப்பை மிகத்துல்லியமாக கண்டறிந்தது, மேலும் மாரடைப்பு ஏற்படாத போது இந்த செயலி எவ்வித அறிகுறியையும் தெரிவிக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் முஹ்லெஸ்டெயின் தெரிவித்தார். 



    மாரடைப்பை கண்டறியும் செயலி மற்றும் இரண்டு வயர் எக்ஸ்டென்ஷனுக்கான கட்டணம் மிகவும் குறைவு தான். இதை கொண்டு ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கும் அனைவராலும் இ.சி.ஜி. பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

    கார்டியா ஆப் பயன்படுத்த முதலில் ஸ்மார்ட்போனில் கார்டியா அப் சென்று, சாதனத்தை ஸ்மார்ட்போனின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி விரல் நுனியை சாதனத்தில் சில நொடிகள் வரை மென்மையாக வைக்க வேண்டும். முப்பது நொடிகள் பதிவானதும், உங்களுக்கான பரிசோதனை அறிக்கையை ஸ்மார்ட்போனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மாரடைப்பு அபாயத்தை கண்டறியும் கார்டியா ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (ரூ.7,181) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×