search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தீபாவளி காலத்தில் மட்டும் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சீன நிறுவனம்
    X

    தீபாவளி காலத்தில் மட்டும் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சீன நிறுவனம்

    ஹூவாய் ஹானர் பிரான்டு நிறுவனம் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. #honor #smartphone



    ஹூவாய் ஹானர் பிரான்டு இந்தியாவில் தீபாவளி பண்டிகை காலத்தில் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஹானர் ஸ்டோர்களில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு விற்பனையில் இது சாத்தியமாகி இருக்கிறது.

    ஹானர் நிறுவன ஸ்மார்ட்போன்களான ஹானர் 9என், ஹானர் 9 லைட், ஹானர் 7எஸ், ஹானர் 9ஐ, ஹானர் 10 மற்றும் ஹானர் 7ஏ உள்ளிட்ட மாடல்கள் சிறப்பு விலையில், பிரத்யேக சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டன.

    பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் பிரபல ஸ்மார்ட்போனாக ஹானர் 9என் இருந்ததாக ஹானர் தெரிவித்துள்ளது. இத்துடன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையின் ரூ.12,000 முதல் ரூ.15,000 பிரிவில் ஹானர் 8X அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முந்தைய 2017ம் ஆண்டு தீபாவளி விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஹானர் நிறுவனம் 300% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. 

    சிறப்பு விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் பெருமளவு வரவேற்பு காரணமாக பிளிப்கார்ட் தளத்தில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை வழங்க ஹானர் முடிவு செய்திருக்கிறது.
    Next Story
    ×