search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புது டீசர்
    X

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புது டீசர்

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புது டீசர் மற்றும் டிஸ்ப்ளே விவரங்கள் வெளியாகியுள்ளது. #Samsung #Foldablephone



    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நடைபெறலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே சார்ந்த சிறப்பம்சங்களை சாம்சங் தெரியப்படுத்தி இருக்கிறது.

    அந்த வகையில் மடிக்கப்பட்ட நிலையில் 4-இன்ச் ஸ்மார்ட்போனாகவும், திறந்த நிலையில் 7-இன்ச் டேப்லெட் போன்றும் இயங்கும். முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் இரண்டு OLED பேனல்களை வழங்க இருப்பதாக சாம்சங் தெரிவித்து இருந்தது. இதன் முதன்மை டிஸ்ப்ளேவில் 7.29 இன்ச்களும், இரண்டாவது டிஸ்ப்ளே 4.58 இன்ச் கொண்டிருக்கும். பேனல் அளவு 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் ஆக இருக்கிறது.

    இதனால் புதிய மடிக்கக்கூடிய சாதனத்தை ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தின் உற்பத்தி நவம்பர் மாதத்தில் துவங்கும் என தெரிகிறது. முதற்கட்டமாக ஆண்டிற்கு ஐந்து முதல் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. 



    புதுவித சாதனம் என்பதால், சந்தையில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனையை அறிந்து கொண்டு உற்பத்தியை அதிகரிக்க சாம்சங் திட்டமிட்டு இருக்கிறது. மடிக்கப்பட்ட நிலையில் வழக்கமான ஸ்மார்ட்போன்களை போன்ற வசதிகளை இந்த சாதனம் வழங்கும். எனினும் மடிக்கப்பட்ட நிலையில் போன் அதிக தடிமனாகவும், அதிக பேட்டரி பயன்படுத்தப்படும், வெளிப்புற பேனல் திறக்கப்பட்டதும், சாதனம் மெல்லியதாகவும், பேட்டரி பேக்கப் குறைவாகவும் பயன்படுத்தப்படும்.

    ஸ்மார்ட்போனை மடிக்கச்செய்யும் தாழ்பாள் மடிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேனல்களும் ஒட்டிக் கொண்டு சிறிய இடைவெளி இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாதனம் எளிதில் உடையாமல் இருக்கும். சாம்சங் தனது மடிக்கக்கூடிய சாதனத்தின் முதற்கட்ட அறிவிப்பாக, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சாம்சங் லோகோவை பதிவிட்டிருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இம்மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. எதுவாயினும், தற்சமயம் நடைபெறும் 2018 சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் (SDC 2018) புதிய மடிக்கக்கூடிய சாதனம் பற்றிய விவரங்களை சாம்சங் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Samsung #Foldablephone
    Next Story
    ×