search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் இருக்காதாம்
    X

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் இருக்காதாம்

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyS10 #smartphone



    சாம்சங் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்10 மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் பல்வேறு உயர் ரக அம்சங்களை வழங்கலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமரா சென்சார் உள்ளிட்டவை முதன்மை அம்சங்களாக இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் ஐரிஸ் சென்சாரை நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    வழக்கமான ஆப்டிக்கல் கைரேகை சென்சார்களுடன் ஒப்பிடும் போது எஸ்10 மாடலில் வழங்கப்பட இருக்கும் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் பெருமளவு உணரும் பகுதியை கொண்டிருக்கும் என்றும் ஸ்கிரீனின் 30% பகுதிகளில் உணர முடியும் என கூறப்படுகிறது. 

    மேலும் 2019ம் ஆண்டு எஸ்10 மாடலின் அல்ட்ராசவுன்ட் மற்றும் புதுவித ஸ்கிரீன் தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் சாம்சங் நிறுவன சாதனங்களில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போன்களை மூன்று வேரியன்ட்களில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவற்றில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் திரை, மூன்று பிரைமரி கேமரா சென்சார்,  இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கேமரா அம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று 12 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், புத்தம் புதிய 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 மாடலின் விலை குறைந்த வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×