search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு பை அப்டேட் அறிவிப்பு
    X

    நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு பை அப்டேட் அறிவிப்பு

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் மற்றொரு நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #nokia6



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்குகிறது. முன்னதாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்பட்டது. அந்த வகையில் வரும் தினங்களில் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு பை ஸ்டேபிள் அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனுக்கான ஆன்ட்ராய்டு பை அப்டேட் அடுத்த மாத வாக்கில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ஆன்ட்ராய்டு பை அப்டேட் மூலம் நோக்கியா 6.1 மாடலில் அடாப்டிவ் பேட்டரி, ஸ்லைசஸ், மேம்படுத்தப்பட்ட நேவிகேஷன் ஜெஸ்ட்யூர்கள் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. 



    நோக்கியா 6.1 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
    Next Story
    ×