search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் வசதி
    X

    வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் வசதி

    வாட்ஸ்அப் செயலியின் ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் வெப் பதிப்புகளில் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டு, இதற்கான அப்டேட் வழங்கப்படுகின்றன. #Whatsapp



    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த அம்சத்தை உருவாக்கி வரும் வாட்ஸ்அப் ஒருவழியாக பயனர்களுக்கு வழங்கி இருக்கிறது.

    புதிய ஸ்டிக்கர் அம்சத்திற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்படுவதால், அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க சில நாட்கள் ஆகும். இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் ஸ்டோர் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

    முதற்கட்டமாக ஸ்டிக்கர்ஸ் அம்சத்தில் கப்பி என்ற பெயரில் ஒரே பேக் மட்டும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை அன்-இன்ஸ்டால் செய்து, கூடுதலாக கிடைக்கும் ஸ்டிக்கர் பேக்களை இன்ஸ்டால் செய்யலாம். ஸ்டிக்கர்கள் எமோஜி, புகைப்படங்கள் அல்லது ஜிஃப்களை விட வித்தியாசமானவை. இவை இயங்குதளங்கள் அல்லது எமோஜி போன்ற தளங்களின் ஆதரவின்றி கிடைக்கிறது.  

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் ஜிஃப் ஐகானை அடுத்து வலதுபுறத்தில் ஸ்டிக்கர் ஐகான் தெரியும். இதில் பயனர் விரும்பும் ஸ்டிக்கர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஐ.ஓ.எஸ். பயனர்கள் டெக்ஸ்ட் இன்புட் பகுதியில் காணப்படும் ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும்.

    புதிதாக பேக்களை சேர்க்க ஸ்டிக்கர் பகுதியியன் இடது புறத்தில் இருக்கும் பிளஸ் ஐகானஐ கிளிக் செய்து ஸ்டிக்கர் ஸ்டோர் செல்ல வேண்டும். இங்கு அனைத்து ஸ்டிக்கர்களும் இடம்பெற்றிருக்கும். பயனர்கள் ஸ்டிக்கர்களை பிரீவியூ மற்றும் டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மை ஸ்டிக்கர்ஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.
    Next Story
    ×