search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இனி ஃபேஸ்புக் ஸ்டோரியில் மியூசிக் சேர்க்கலாம்
    X

    இனி ஃபேஸ்புக் ஸ்டோரியில் மியூசிக் சேர்க்கலாம்

    ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டோரிக்களில் மியூசிக் சேர்க்கும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக் ஸ்டோரிக்களில் மியூசிக் சேர்க்கும் வசதி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஸ்டோரிக்களில் சேர்க்கப்படும் இந்த வசதி, விரைவில் ப்ரோஃபைலிலும் சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் மியூசிக் சேர்ப்பதை போன்றே ஃபேஸ்புக் தளத்திலும் புகைப்படம் மற்றும் வீடியோவில் பாடலை சேர்க்க முடியும். இதை செயல்படுத்த போட்டோ அல்லது வீடியோ எடுத்து, மியூசிக் ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பயனர் விரும்பிய பாடலை சேர்த்ததும், பாடலில் உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேர்க்கலாம். 

    பயனர்கள் ஸ்டிக்கரை விரும்பும் இடத்தில் வைத்துக் கொண்டு அவற்றில் எஃபெக்ட்களை சேர்த்து ஸ்டோரியை கஸ்டமைஸ் செய்யலாம். இத்துடன் ஃபேஸ்புக் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்த லிப் சின்க் லைவ் அம்சத்தை விரைவில் வழங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பாடல்களுக்கு லிப் சின்க் செய்ய முடியும். இந்த வசதி உலகம் முழுக்க அனைத்து ப்ரோஃபைல்களுக்கும் வழங்கப்படுகிறது. 

    புதிய அம்சம் அதிக ஆர்டிஸ்ட் மற்றும் கிரியேட்டர்களுக்கு வழங்கும் நோக்கில், பக்கங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிரபலங்கள் தங்களது நலம்விரும்பிகளுடன் இணைப்பில் இருக்க முடியும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃபிரெட் பெடைல் தெரிவித்தார்.
    Next Story
    ×