search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் X பயன்படுத்தியவர் மீது ரூ.11 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த சாம்சங்
    X

    ஐபோன் X பயன்படுத்தியவர் மீது ரூ.11 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த சாம்சங்

    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், பொது இடங்களில் ஐபோன் X பயன்படுத்திய பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. #Samsung



    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் சாம்சங், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆப்பிள் மீது வழக்கு தொடர்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்றும் கூறலாம்.

    சாம்சங் மற்றும் ஆப்பிள் இடையே சட்டப்பூர்வமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில், சாம்சங் புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. வழக்கமாக ஆப்பிள் மீது வழக்கு பதிவு செய்யும் சாம்சங், இம்முறை ஆப்பிள் ஐபோன் X பயன்படுத்திய பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

    ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரபலங்களை விளம்பர தூதர்களாக நியமிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் சாம்சங் நியமித்த பெண் விளம்பர தூதர் மீது தான் சாம்சங் வழக்கு பதிவு செய்துள்ளது. ரஷ்யாவில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் செனியா சொப்சாக் சாம்சங் நிறுவன விளம்பர தூதராக இருக்கிறார். 

    சாம்சங் நிறுவனத்துடன் இவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் சொப்சாக் பொது இடங்களில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சொப்சாக் சாம்சங் நிறுவனத்துக்கு 16 லட்சம் டாலர்கள் வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது.


    புகைப்படம் நன்றி: CEN

    சாம்சங் நிறுவன விளம்பர தூதராக இருக்கும் நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐபோன் X பயன்படுத்தியது, மேலும் சில பொது நிகழ்ச்சிகளில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் நிறுவனம் சார்பில் சொப்சாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    எனினும், தனது விளம்பர தூதர் பல்வேறு சமயங்களில் பொது வெளியில் ஐபோன் X பயன்படுத்தியதால் சாம்சங் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

    சமூக வலைதளம் மற்றும் பொது வெளியில் தங்களது சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரான்டு நிறுவனங்கள் சார்பில் பிரபலங்களை விளம்பர தூதர்களாக நியமிக்கும் வழக்கம் பொதுவான ஒன்று தான். சில விளம்பர தூதர்கள் தங்களது ஒப்பந்தத்தின் படி பொது வெளியில் போட்டி நிறுவன சாதனங்களை பயன்படுத்த மாட்டோம் என குறிப்பிட்டு இருப்பர்.

    அந்த வகையில் விளம்பர தூதராக இவ்வாறு செய்து சிக்கிக் கொண்ட முதல் நபராக சிப்சொக் இருக்கலாம். எனினும் ஐபோன் X பயன்படுத்தினால் ரூ.11 கோடி வரை செலவிட நேரிடும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.
    Next Story
    ×