search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்
    X

    ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்

    இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை ஆட்டம் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. #Zebronics #speaker



    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெப்ரானிக்ஸ் புதிய ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பீக்கர் விழாக்கால சிறப்பு விளக்குடன் வருகிறது. இதனால் வயர்லெஸ் ஸ்பீக்கரை பயன்படுத்தும் போது விழாக்கால மனநிலையை அமைத்துத்தருகிறது.

    ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய “ஆட்டம்” என்னும் வயர்லெஸ் ஸ்பீக்கரில் 60 LED ஒளி விளக்குகளுடன் கூடிய ஸ்பீக்கர், தீபம் போன்ற வடிவிலான ஒளியை வெளிப்படுத்தி, எப்படிப்பட்ட விழாவையும் சிறப்பிக்கிறது. 

    சிறியதாக இருப்பினும் சிறந்த நவீன வசதிகளுடன், ‘ஆட்டம்’ ஸ்பீக்கர் ஒரு ஆர்ச் ஐ போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 60 LED விளக்குகள் மூலம் இதமான மஞ்சள் நிற ஒளி மூவம் அறையை அலங்கரிக்கிறது. மிகச் சிறந்த ஒலியுடன் கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கை நிச்சயமாக அனுபவிக்கலாம்.



    இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இரண்டு விதமான சலுகைகளுடன் வருகிறது, ஆதாவது நீங்கள் உங்கள் விருப்ப பாடல்களை BT மூலம் வயர்லெஸ் முறையில் கேட்கலாம் அல்லது மைக்ரோ SD Card மூலம் கேட்கலாம். நடுப்புறத்தில் உள்ள பட்டன்கள்  மூலம் நீங்கள் பாடல் வரிசைகளை மாற்றலாம் அல்லது ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். மேலும் இதில் உள்ள விளக்கை இயக்க ஒரு பிரத்யேக சுவிட்ச் உள்ளது.

    “நாங்கள் எங்களது புதிய பண்டிகை கால படைப்பான 2 இன் 1 ஸ்பீக்கர் மற்றும் விளக்கைக் கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறோம்; இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் ஒரு சிறந்த பண்டிகை கால பொருளாகவும், விளக்குகள் கொண்டு ஒளிர்வதால் நண்பர்களுக்கு பரிசாகவும் அளிக்க சிறப்பாக இருக்கும்." என ஜெப்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் திரு. பிரதீப் தோஷி தெரிவித்தார்.

    ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் வயர்லெஸ் ஸ்பீக்கர் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.1,699 விலையில் கிடைக்கும் ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ஸ்பீக்கர் இந்தியா முழுக்க பல்வேறு முன்னணி கடைகளில் கிடைக்கிறது.
    Next Story
    ×