search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் அறிமுகம்

    வெர்ச்சு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Vertu #smartphone



    வெர்ச்சு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக வெர்ச்சு அறிவித்து இரண்டு ஆண்டுகள் கழித்து புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் டைட்டானியம் அலாய் ஃபிரேம், சஃப்பையர் கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் உண்மையான லெதர் மூலம் செய்யப்பட்ட பின்புற பேக் பேனல் உள்ளிட்டவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்மார்ட்போனில் பாரம்பரிய கான்சீர்ஜ் பட்டன் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயண திட்டங்கள், உணவகங்களில் முன்பதிவு மற்றும் பல்வேறு அம்சங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.



    வெர்ச்சு ஆஸ்டெர் பி சிறப்பம்சங்கள்:

    - 4.97 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் பிராசஸர்
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - பின்புற சிம் கார்டு டிரே
    - வி டாக் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம்
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 3.0

    வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் தவறானவர்கள் கைகளில் கிடைத்தால், ஸ்மார்ட்போன் தானாக லாக் ஆகச் செய்யும் பிரத்யகே ஆப் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான சாதனங்களை போன்று இல்லாமல், ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போனில் பிரெசிஷன் மெட்டல் உபகரணங்கள், பிரத்யேக வடிவமைப்பு உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்ட மெக்கானிக்கல் வாட்ச்களில் வழங்கப்படுவதை போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போனின் கேஸ் கிரேடு 5 டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது இருமடங்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலின் உறுதித் தன்மை மற்றும் மிக குறைந்த எடை கொண்டுள்ளது. வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் பரோக் சீரிஸ் பிளாக், ஜென்டில்மேன் புளு, கேரமெல் பிரவுன் மற்றும் டுவைலைட் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.



    புதிய வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் JD.com வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 29,800 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,08,550 முதல் துவங்குகிறது. புதிய வெர்ச்சு ஸ்மார்ட்போனின் கோதிக் சீரிஸ் மாடல் பிளாக் ஜேட் மற்றும் வைட் மூன் நிறங்களில் கிடைக்கிறது. 

    கோதிக் சீரிஸ் மாடல் மாடல் விலை 35,800 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,74,670 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெர்ச்சு விலை உயர்ந்த மாடலான ஆஸ்டெர் பி டேஸ்லிங் கோல்டு வேரியன்ட் விலை 98,000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,37,385 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×