search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இமாலய இலக்கை தொட்ட ஜியோ
    X

    இமாலய இலக்கை தொட்ட ஜியோ

    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்துள்ளது. ஜியோ காலாண்டு முடிவு வெளியீட்டின் போது இந்த அறிவிப்பு இடம்பெற்று இருக்கிறது.

    ஜியோ காலாண்டு வருவாய் ரூ.9,240 கோடியாக என ஜியோ அறிவித்துள்ளது. இதுமுந்தைய காலாண்டை விட 14 சதவிகிதம் வரை அதிகம் ஆகும். இதில் மொத்த லாபம் மட்டும் ரூ.681 கோடியாகும். வருவாய் அறிவிக்கையோடு ஹேத்வே மற்றும் டேட்டாகாம் நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வாங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.


    கோப்பு படம்

    செப்டம்பர் 30, 2018 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஜியோ சேவையில் சுமார் 25.23 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பதாகவும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருவாய் மட்டும் ரூ.131.7 என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 11 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி வருகின்றனர்.

    சராசரி வாய்ஸ் கால் பயன்பாட்டை பொருத்த வரை வாடிக்கையாளர் மாதம் 761 நிமிடங்கள் பயன்படுத்துகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கைாயளர்கள் மொத்தம் 771 கோடி ஜி.பி. டேட்டாவும், 53,379 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் பயன்படுத்தி இருக்கின்றனர். இது மாதம் 410 கோடி மணி நேரங்கள் ஆகும்.

    ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை பொருத்த வரை இந்தியா முழுக்க 1,100-க்கும் அதிக நகரங்களில் இருந்து பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவு ஆகஸ்டு 15ம் தேதி துவங்கியது.
    Next Story
    ×