search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நான்கு நாட்களில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சீன நிறுவனம்
    X

    நான்கு நாட்களில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சீன நிறுவனம்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் நான்கு நாட்களில் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. #Realme



    ஒப்போ நிறுவனத்தின் துணை பிரான்டு ஆன ரியல்மி இந்தியாவில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்னையில் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.

    ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் இரண்டாவது விற்பனையில் சுமார் 1,10,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் நான்கு நாட்களில் 10 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. சமீபத்திய பிளிப்கார்ட் விற்பனையின் மூலம் ரியல்மி பிரான்டு இந்திய சந்தையில் சியோமி அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

    ரியல்மி ஸ்மார்ட்போன்களின் அடுத்த விற்பனை அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் மூலம் பிளிப்கார்ட் தளத்தில் மற்றொரு சிறப்பு விற்பனை நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



    ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி சி1 ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்து பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டன. இதில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1, மோட்டோரோலா ஒன் பவர், நோக்கியா 6.1 பிளஸ், சாம்சங் கேலக்ஸி ஜெ6, Mi ஏ2 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அட்ரினோ 512 GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 16 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.7, 2 எம்.பி. டெப்த் சென்சார் கேமரா வழங்கப்படுகிறது. முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, F/2.0  அப்ரேச்சர் கொண்டுள்ளது.

    ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமைகிறது. சி1 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி, 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×