search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்
    X

    விரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்

    அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கின்றன. #ASUS #smartphone



    அசுஸ் நிறுவனம் அக்டோபர் 17-ம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுவரை அந்நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய சாதனம் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அசுஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அசுஸ் அறிமுகம் செய்த ஸ்டாக் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலான சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அடுத்த மாடலாக புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது.

    அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 லைட் மாடல்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இவை ரெட்மி 6 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அசுஸ் சென்ஃபோன் ப்ரோ எம்2 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன்கள் சான்றளிக்கும் வலைதளத்தில் லீக் ஆகியிருந்தன.



    இணையத்தில் லீக் ஆன இரண்டு அசுஸ் ஸ்மார்ட்போன்களும் ZB633KL மற்றும் ZB631KL மாடல் நம்பர்களை கொண்டுள்ளன. மேலும் இவற்றில் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் மேக்ஸ் ப்ரோ எம்2 சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.

    எனினும் புதிய ஸ்மார்ட்போன்களில் முறையே 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என்றும், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆன்ட்ராய்டு, மற்றும் நாட்ச் ரக டிஸ்ப்ளே, 18:9 ஃபுல் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டிருக்கும் என்றும் இவை முந்தைய ஸ்மார்ட்போனை விட மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலில் 13 எம்.பி. மற்றும் 5 எம்.பி. பிரைமரி கேமரா யூனிட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை டூயல் சிம் கார்டு ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் போன்றவை இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×