search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்
    X

    ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #redminote6pro



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமாக சியோமி ஸ்மார்ட்போன்கள் 10 முதல் 12 மாதங்கள் இடைவெளியில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

    எனினும் ரெட்மி 5 சீரிஸ் போன்கள் வெளியான ஆறு மாதங்களிலேயே ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்த நிலையில், விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இஷான் அகர்வால் கூறும் போது, சியோமி நிறுவனம் புதிய சாதனத்தை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த சாதனம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும், இது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகமாகலாம் என தெரிகிறது.

    ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், முன்பக்கம் டூயல் பிரைமரி கேமரா யூனிட், யு.எஸ்.பி. போர்ட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் கொண்டிருக்கிறது.



    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் PD ஃபோக்கஸ், EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 5 சீரிஸ் போன்றே புதிய நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.14,999 முதல் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டது.
    Next Story
    ×