search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசத்தல் அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
    X

    அசத்தல் அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. #GooglePixel3 #GooglePixel3XL



    கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. 

    பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளேவும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் குவாட் ஹெச்.டி., 18:5:9 நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க இரண்டு பிக்சல் போன்களிலும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், டூயல் பிக்சல் ஆட்டோஃபோக்கஸ், டூயல் 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் புதிய ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய பிக்சல் போன்களின் முக்கிய அம்சங்கள்

    டாப் ஷாட் - ஏ.ஐ. சார்ந்த இயங்கும் இந்த அ்மசம் பல்வேறு ஷாட்களை எடுத்து அவற்றில் சிறந்த புகைப்படத்தை தேர்வு செய்யும்.
    சூப்பர் ரெஸ் சூம் - சூம் செய்யும் போதும் துல்லியமான தரம் வழங்கும்.
    நைட் சைட் - குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை அதிக துல்லியமாக எடுக்கலாம்.
    போட்டோபூத் மோட் - ஏ.ஐ. கொண்டு பயனர் சிரிப்பது, நகைச்சுவை பாவணைகளை வழங்குவது, செல்ஃபி எடுக்க தயாராவது போன்றவற்றை கண்டறியும்.

    இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டைட்டன் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை லாக் செய்து தகவல்களை பாதுகாப்பதோடு, டிஸ்க் என்க்ரிப்ஷனை பலப்படுத்துகிறது.

    பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் பிக்சல் வரலாற்று சிறப்பு கொண்ட டூயல்-டோன் டிசைன், அலுமினியம் ஃபிரேம், ஹைப்ரிட் கோட்டிங், போனின் முன்புறம் மற்றும் பின்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பிக்சல் போன்கள் முந்தைய மாடல்களை விட 40% அதிக சத்தமாக இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் இவற்றில் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.



    கூகுள் பிக்சல் 3 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1080x2160 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K
    - 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV
    - 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV
    - கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68)
    - முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்



    கூகுள் பிக்சல் 3 XL சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + OLED 18:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K
    - 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV
    - 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV
    - கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68)
    - முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்

    பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் கிளியர்லி வைட், ஜஸ்ட் பிளாக் மற்றும் நாட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிக்சல் யு.எஸ்.பி.-சி இயர்பட்களுடன் வருகிறது.

    இந்தியாவில் பிக்சல் 3 (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.71,000 என்றும், 128 ஜி.பி. பிக்சல் 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.80,000 என்றும் பிக்சல் 3 XL (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.83,000 என்றும் 128 ஜி.பி. பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் விலை ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    பிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் ஸ்டான்ட் விலை ரூ.6,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு அக்டோபர் 11-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது. இத்துடன் இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையகங்களில் நவம்பர் 1-ம் தேதி முதல் கிடைக்கும்.

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போதோ அல்லது நெட்பேங்கிங் பயன்படுத்தும் போது முறையே ரூ.5000 மற்றும் ரூ.4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×