search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் 6டி வெளியீட்டு தேதி
    X

    ஒன்பிளஸ் 6டி வெளியீட்டு தேதி

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அக்டோபர் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்தியாவில் நடைபெற அறிமுக விழாவில் பங்கேற்க நுழைவு கட்டணமாக ரூ.999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி முதல் நுழைவு சீட்டுக்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் அறிமுக விழாவில் கலந்து கொள்வோர் புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி பார்க்க முடியும். மேலும் விழாவில் கலந்து கொள்வோருக்கு பரிசு கூப்பன் மற்றும் புல்லெட்ஸ் வயர்லெஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஒன்பிளஸ் 6டி அறிமுக விழா வலைதளங்களில் நேரலை செய்யப்படுகிறது.



    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்கிரீன் அன்லாக் என அழைக்கிறது. ஸ்கிரீன் அன்லாக் தொழில்நுட்பம் மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் உபகரணங்கள் மூலம் இயங்குகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிளாஸ் பிளாக் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை.



    ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம்.
    Next Story
    ×