search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இரண்டு நிறங்களில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி
    X

    இரண்டு நிறங்களில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக விரைவில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 6டி விவரங்கள் இணையத்தில் அதிகளவு லீக் ஆகிவருகிறது.

    அந்த வகையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இரண்டு புதிய நிறங்களை கொண்டிருப்பது சமீபத்தில் லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.

    இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களின் படி ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பிளாக்-மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் என இரண்டு நிறங்களை கொண்டிருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் மென்மையான கிளாஸ் பிளாக் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை.


    புகைப்படம் நன்றி:  WinFuture

    இது ஏற்கனவே வெளியான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. லீக் ஆகியிருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் 6டி மாடலில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கிறது.

    முன்னதாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல்முறையாக நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கி இருந்தது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் புதிய வகை நாட்ச் வழங்க இருக்கிறது.

    ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. 

    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340x1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க முந்தைய ஒன்பிளஸ் 6 போன்றே 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்படலாம்.
    Next Story
    ×