search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதிய ஐபோன்களின் பேட்டரி மற்றும் ரேம் விவரங்கள் வெளியாகியுள்ளது
    X

    புதிய ஐபோன்களின் பேட்டரி மற்றும் ரேம் விவரங்கள் வெளியாகியுள்ளது

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களின் பேட்டரி மற்றும் ரேம் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #iPhoneXS



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. வழக்கம் போல் ஆப்பிள் நிறுவனம் இம்முறையும் புதிய ஐபோன்களின் பேட்டரி மற்றும் ரேம் சார்ந்த விவரங்களை வழங்கவில்லை. இந்த விவரங்கள் சான்றளிக்கும் வலைத்தளங்கள் அல்லது டியர்டவுன் வீடியோக்களில் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் புதிய ஐபோன்களின் விவரங்கள் இம்முறை சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் X மாடலில் 2716 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருந்தது. 



    5.8 இன்ச் ஐபோன் XS மாடலில் 2658 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், 6.5 இன்ச் ஐபோன் XS மேக்ஸ் மாடலில் 3174 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஐபோன்களிலும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 6.1 இன்ச் ஐபோன் XR மாடலில் 2942 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    ஸ்மாபர்ட்போனின் வன்பொருள் விவரங்கள் ஐஃபிக்சிட் அல்லது டெக்இன்சைட்ஸ் டியர்டவுன் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகிறது. ஐபோன் XS விலை ரூ.99,900 மற்றும் ஐபோன் XS மேக்ஸ் விலை ரூ.1,09,900 முதல் துவங்குகிறது. ஐபோன் XR விலை ரூ.76,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 26-ம் தேதி முதல் கிடைக்கும்.
    Next Story
    ×