search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் அறிமுகமாகும் நோக்கியா கேமிங் போன்
    X

    விரைவில் அறிமுகமாகும் நோக்கியா கேமிங் போன்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பல்வேறு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், விரைவில் கேமிங் போன் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Nokiamobile



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பல்வேறு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெவ்வேறு விலையில் அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் நோக்கியா 8 சிரோக்கோ மர்றும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன்களை அதிக விலையில் ஒன்றையும், குறைந்த விலையில் ஒன்றையும் அறிமுகம் செய்தது.

    அந்த வகையில் நோக்கியா நிறுவனம் விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹானர், அசுஸ், சியோமி, ரேசர் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே கேமிங் ஸ்மார்ட்போனினை இதுவரை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் நோக்கியாவும் இணையும் என தெரிகிறது.

    நோக்கியா பிரான்டிங்கை கைப்பற்றிய பின் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் செய்ஸ் பிரான்டிங்கை ஹெச்.எம்.டி. குளோபல் கைப்பற்றியது, அந்த வகையில் என்-கேஸ் பிரான்டிங்கில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கேமிங் அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    புதிய கேமிங் ஸ்மார்ட்போனிற்கென சிறிய வீடியோ ஒன்றை நோக்கியா மொபைல் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும் ட்விட் உடன் #GameOn என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருந்தது.

    மற்ற கேமிங் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது நோக்கியா மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் கேமிங் சார்ந்த உதிரிபாகங்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 7 பிளஸ் மாடலில் காம்பேக்ட் நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் போன்றவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×