search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    உலகின் முதல் எல்.இ.டி. ஃபார் ஹோம் ஸ்கிரீன் - இந்தியாவில் அறிமுகம் செய்த சாம்சங்
    X

    உலகின் முதல் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீன் - இந்தியாவில் அறிமுகம் செய்த சாம்சங்

    சாம்சங் இந்தியா நிறுவனம் உலகின் முதல் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Samsung #LED



    உலகின் முதல் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீனை சாம்சங் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவ் எல்.இ.டி. என்றும் அழைக்கக் கூடிய ஸ்கிரீன் வீட்டு பயன்பாடுகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முதல் எல்.இ.டி. ஆகும்.

    வீட்டினுள் பொழுதுபோக்கு இடைவெளியை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டும் இந்த எல்.இ.டி. வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த வீடியோ அனுபவத்தை வழங்கும்.



    சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கும், தலைசிறந்த ஆடியோ மற்றும் வீடியோ தரவுகளை சூப்பர் பிரீமியம் திரையில் பார்க்க விரும்புவோரை குறிவைத்து புதிய எல்.இ.டி. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரையால் மிகவும் நுணுக்கமான வீடியோ தரத்தை துல்லியமாக வழங்க முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது. 

    மெல்லிய வடிவமைப்பில் மாட்யூலர் ஃபார்மேஷன் தொழில்நுட்பம் மூலம் பொருத்தக்கூடிய வகையில், பயனர்கள் விரும்பும் படி ஸ்கிரீன் அளவை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர் விரும்பும் படி திரையை எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம்.

    ஹெச்.டி.ஆர். பிக்சர் ரிஃபைன்மென்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் திரையில் வீடியோ பார்க்க நேரில் பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும் என்றும் காட்சிகள் மிகத்துல்லியமாக தெரியும். திரையை சுற்றி நிலவும் வெளிச்சங்களால் காட்சியில் எவ்வித இடையூறும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த சீரிஸ்-இல் 110-இன்ச் FHD, 130-இன்ச் FHD, 220-இன்ச் UHD மற்றும் 260-இன்ச் UHD அளவுகளில் கிடைக்கிறது. இந்த திரை 1,00,000-க்கும் அதிக மணி நேரங்கள் உழைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சாம்சங் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீன் அளவுகளுக்கு ஏற்ப விலை ரூ.1 கோடியில் துவங்கி அதிகபட்சம் ரூ.3.5 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×