search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இரண்டு வாரங்களில் இத்தனை லட்சமா? ஸ்மார்ட்போன் விற்பனையில் அசத்தும் சீன நிறுவனம்
    X

    இரண்டு வாரங்களில் இத்தனை லட்சமா? ஸ்மார்ட்போன் விற்பனையில் அசத்தும் சீன நிறுவனம்

    ஒப்போ துணை பிரான்டு ரியல்மி இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. #RealMe2



    ஒப்போ துணை பிரான்டு ரியல்மி இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ரியல்மி 2 முதல் விற்பனை ஐந்து நிமிடங்களே நீடித்தது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற்ற ஃபிளாஷ் விற்பனையில் இரண்டு லட்சம் ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது ஃபிளாஷ் விற்பனையில் சுமார் 1.7 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இரண்டு விற்பனையில் சேர்த்து மொத்தம் 3.7 லட்சம் ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    இந்தியாவில் ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 ஸ்மார்ட்போன்கள் சேர்த்து சுமார் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. ரியல்மி 1 அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ரியல்மி 2 அறிமுகமாகி இரண்டு வாரங்களே ஆகி்யுள்ளது.

    சமீபத்தில் ரியல்மி பிரான்டு விளம்பர படம் ஒன்றை வெளியிட்டது. நியூ யார்க் நகரில் படமாக்கப்பட்டு இருக்கும் விளம்பர படத்தில் மூன்று இளைஞர்கள் வெவ்வேறு சூழல்களை எதிர்கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது. இந்தியாவைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் விரைவில் விற்பனையை துவங்க இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது.

    முன்னதாக ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை புதிய டீசர் புகைப்படம் மூலம் ரியல்மி அறிவித்தது. அதன்படி ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
    Next Story
    ×