search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்
    X

    விரைவில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை புதிய டீசர் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #galaxyj6 #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் சார்ந்த தகவலை புதிய டீசர்கள் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதன்படி இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட இருக்கிறது. கேலக்ஸி ஜெ6 பிளஸ் மாடலில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்படுகிறது.

    சோனி மற்றும் மெய்சூ நிறுவன ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற அமைப்பு வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக கேலக்ஸி ஜெ6 பிளஸ் இருக்கும். இத்துடன் கேலக்ஸி ஜெ6 பிளஸ் மாடலில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



    இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இவை பிரகாசமான நிறங்கள் மற்றும் எமோட்டிஃபை அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்பதால் இவை ஆஃப்லைன் விற்பனை மையகங்களிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×