search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எல்ஜி வி40 தின்க் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி
    X

    எல்ஜி வி40 தின்க் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி

    எல்ஜி நிறுவனத்தின் வி40 தின்க் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #LGV40ThinQ



    எல்ஜி நிறுவன ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவன வழக்கத்திற்கு மாறாக வெளியிடப்படுகிறது. எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் பலமுறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன, ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் பல்வேறு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் எல்ஜி வி40 தின்க் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

    எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக எல்ஜி வி40 இருக்கிறது. சமீபத்தில் அக்டோபர் 3-ம் தேதி விழாவுக்கான அழைப்புகளை எல்ஜி வெளியிட்டது. இதனுடன் "Take 5" என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    வி40 சீரிஸ் அதிகளவு லீக் ஆகவில்லை என்றாலும், சிலமுறை இதன் விவரங்கள் வலைத்தளங்களில் தோன்றி இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் மற்றும் இரண்டு செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    சமீபத்தில் லீக் ஆன வடிவமைப்பில் இதன் தோற்றம் பார்க்க எல்ஜி வி30 மாடலை போன்று காட்சியளித்தது. எனினும் புதிதாக நாட்ச் மற்றும் கூடுதல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய எல்ஜி வி40 தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்ற வகையில் இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 1440 பிக்சல் டிஸ்ப்ளே, குறைந்தபட்சம் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தைய ஸ்மார்ட்போன் மாடல்கள் எதிர்பார்த்த வெற்றியை வழங்காத நிலையில், புதிய வி40 ஸ்மார்ட்போன் சந்தையில் எத்தகைய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது ஸ்மார்ட்போன்களில் டீப் தின்க் பிளாட்ஃபார்ம் சேர்த்திருப்பதை எல்ஜி கடந்த ஆண்டு அறிவித்தது. 

    இந்நிலையில், சிங்குளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்கள், தொலைகாட்சி, குளிர்ச்தான பெட்டிகள், குளிரூட்டிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் ரோபோட் உள்ளிட்டவற்றுக்கு வழங்க எல்ஜி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
    Next Story
    ×