search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இன்பாக்ஸ் ஆப் சேவையை நிறுத்தும் கூகுள்
    X

    இன்பாக்ஸ் ஆப் சேவையை நிறுத்தும் கூகுள்

    கூகுள் இன்பாக்ஸ் செயலி நிறுத்தப்படுவதாக கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GoogleInbox



    கூகுள் இன்பாக்ஸ் செயலியை மார்ச் 2019 வாக்கில் நிறுத்தப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த தகவலை கூகுள் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இன்பாக்ஸ் செயலி புதிய மின்னஞ்சல் செயலியாக இருந்து வந்தது. இதில் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு, பின் அவை ஜிமெயிலில் வழங்கப்பட்டது. கூகுளை பொருத்த வரை சோதனை தளமாக செயல்பட்டு வருகிறது. 

    எனினும் போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத காரணத்தாலும், செயலி இருப்பதை உணர்த்தும் பயனர்களுக்கான அப்டேட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 



    "அனைவருக்கும் சிறப்பான மின்னஞ்சல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேலும் சிறப்பான அணுகுமுறையை கையாள வேண்டும். இதனால், ஜிமெயிலில் மட்டும் அதிக கவனம் செலுத்தி, இன்பாக்ஸ் சேவையை மார்ச் 2019-க்குள் நிறுத்த இருக்கிறோம்," என ஜிமெயில் அம்சங்ளுக்கான மேளாலர் மேத்யூ சாட் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இன்பாக்ஸ் செயலியில் மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்யும் வசதி, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், நட்ஜஸ், மிகமுக்கிய நோட்டிஃபிகேஷன்கள், ஜெஸ்ட்யூர் மற்றும் பன்ட்லிங் அம்சங்கள் உள்ளிட்டவற்றுடன் வழங்கப்பட்டது. 

    "திடீர் மாற்றம் கடினமாக இருக்கும் என எங்களுக்கு தெரியும், இதனால் இன்பாக்ஸ்-இல் இருந்து புதிய ஜிமெயிலுக்கு மாறுவதற்கான டிராசிஷன் கைடு உருவாக்கி இறுக்கிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
    Next Story
    ×